சொல்ல மறந்த கதை – ஆடு புலி ஆட்டம்/ Solla Marandha Kadhai – Aadupuliaattam

ஆடு புலி ஆட்டம் வழிமுறைகள்

இவ்விளையாட்டினை குறிப்பிட்ட கட்டங்கள் கொண்ட வரைவில் விளையாடப்படுவதாகும். தரையில் வரைவதற்கு சுண்ணாம்புக் கட்டியை உபயோகியுங்கள்.

புளியங்கொட்டைகள் மற்றும் கற்கள் அதில் நகர்த்தி விளையாடவேண்டும். இவ்விளையாட்டினை விளையாட 15 சிறு காய்கள் மற்றும் 3 பெரு காய்கள் வேண்டும். சிறு காய்கள் ஆடுகளாகவும் பெரு காய்கள் புலிகளாகவும் இருக்கும்.

ஆட்டகோட்டினை எப்படி வரைவது

சுண்ணாம்பு கட்டியை கொண்டு தரையில் சமபக்கமுள்ள முக்கோண வடிவம் ஒன்றை வரைந்துகொள்ளுங்கள்.

அதன் உட்புறம் இரண்டு கோடுகளை உச்சியிலிருந்து அடிகொட்டுவரை வரைந்து, இவ்வற்றை வெட்டும்படியாக மூன்று கோடுகளை வரையுங்கள்.

கோடுகள் சந்திக்கும் இடம் காய்கள் வைக்கும் இடங்களாகும்.  புலிக்காய்கள் உச்சியில் ஒன்றும் அடுத்த சந்திகளில் இரண்டுமாக முதலில் வைக்கவேண்டும்.

ஆடுகள் ஒவ்வொன்றாகச் சந்திப்புகளில் இறங்கும்.

ஒரு ஆடு இறங்க புலி அடுத்த சந்திப்புகளில் நாலாப்பக்கமும் நகரும். நகரும்போது அடுத்த சந்திப்புகளில் ஆடு இருந்து அடுத்த நேர்த்திசைச் சந்திப்பு காலியாக இருந்தால் புலியை வெட்டிவிட்டுத் தாவும்.

புலி இப்படி ஆடுகளை வெட்ட முயல்வதும், அதற்கு இடம் கொடுக்காமல் தற்காத்துக் கொள்வதுடன், புலியை நகரவிடாதபடி ஆடுகள் மறிப்பதும்தான்.

புலிகள் இறங்க சந்திப்புகள் இல்லாமல் போனால் ஆடு வெற்றி பெற்றுவிட்டது என்று வைத்துக்கொள்ளவேண்டும்.

புலி இருக்கின்ற சந்திப்புகளில் அத்தனை  ஆடுகளையும் வெட்டிவிட்டால் புலி வென்றதாகும்.

Solla Marandha Kadhai

We have forgotten to tell about our forefathers’ customs, traditions & lifestyle to modern generation. Let’s see about the traditional games in the series which are played by our ancestors not only for entertainment but also for refreshment & memory improvement.

Instructions to play Lambs and Tigers

The game is played in the draft with specific phases. Kindly, use the limestone tie to draw on the ground.

Stones and shells are used to move and play. Use 15 small stones & 3 large stones. Small stones are considered as ‘Lambs’ & large stones are considered as ‘Tigers’.

Let’s see how to draw the draft

Draw an equal triangular shape in ground with the support of limestone

Then, put two straight lines from top to bottom.

Draw three lines in the middle to cut it down.

Place the coins where the lines meet. The Tiger should be placed at the top and the first of the two on the next.

The goats will descend on each of the line-meetings.

If a goat descends Tigers will move by four sides. If Lamb is placed in line-meetings with no coin at the straight direction means Tiger will cut and jump.

Overall, the game is tiger tries to slaughter the sheep & sheep tries to prevent tiger from moves forward.

If there is no line-meeting for tiger to descend, lamb is the winner.

If tiger slaughtered all lambs means tiger is the winner.

 

Sharing is Caring

Leave a Reply