சொல்ல மறந்த கதை – பச்சை குதிரை/ Solla Marandha Kadhai – Pacha kudhirai

chekk oil

பச்சை குதிரை விளையாட்டின் விதிமுறைகள்

இவ்விளையாட்டை எத்தனை பேர் வேண்டுமானாலும் விளையாடலாம். முதல் போட்டியாளரை ‘சாட்…பூட்…திரி… அல்லது பூவா….தலையா…? மூலமாகவோ தேர்ந்தெடுப்பார்கள்

முதல் போட்டியாளர் ஒரு பூவின் பெயரையோ அல்லது உணவின் பெயரையோ ரகசியமாக வைத்து கொள்ளவேண்டும். (அப்பெயரை விளையாட்டில் பங்கேற்காதவர்களிடம் சொல்லிக்கொள்ளலாம்.)

முதல் சுற்றில் போட்டியாளர் தனது கைகளை  தரையில் படும்படி குனிந்து கொள்ள மற்றவர்கள் தமக்கு பிடித்தமான பூவின் பெயரையோ உணவின் பெயரையோ சொல்லி தாண்ட வேண்டும். சுற்று முடியும்வரை போட்டியாளர் தனது கைகளை தரையிலிருந்து எடுக்கக்கூடாது.

இரண்டாம் சுற்றில் போட்டியாளர் தனது கைகளை பாதத்தில் படும்படி குனிந்திருக்க மற்றவர்கள் தமக்கு பிடித்தமான பூவின் பெயரையோ உணவின் பெயரையோ சொல்லி தாண்ட வேண்டும்.

மூன்றாவது சுற்றில் போட்டியாளர் தனது கைகளை முட்டிக்கும் கணுக்காலுக்கு இடையில் பிடித்துக்கொள்ள மற்றவர்கள் தமக்கு பிடித்தமான பெயரை சொல்லி தாண்ட வேண்டும். போட்டியின் இடையில் குனிந்திருப்பவரின் தலை நிமிர்ந்திருந்தால் தாண்டுபவர்கள் ‘தலையை வெட்டி நாய்க்கு போடு’ என்றவுடன் அவர் தலையை குனிந்து கொள்வார்.

இவ்வாறாக ஒவ்வொரு சுற்றுக்கும் போட்டியாளரின் உயரம் கூடிக்கொண்டு போகும். மற்றவர்கள் போட்டியாளரை தாண்டும்போது சொல்லும் பெயரும் போட்டியாளர் ரகசியமாக வைத்திருக்கும் பெயரும் ஒன்றாக இருந்தால் ‘அவுட்’ ஆவார்.

‘அவுட்’  ஆனவர் ஒரு புதிய பெயரை ரகசியமாக வைத்திருக்க மற்றவர்கள் அவரை தாண்ட வேண்டும்.

Solla Marandha Kadhai

We have forgotten to tell about our forefathers’ customs, traditions & lifestyle to modern generation. Let’s see about the traditional games in the series which are played by our ancestors not only for entertainment but also for refreshment & memory improvement

Instructions to play Pacha kudhirai

This game can be played by members as much as possible. First player can be selected either by making

Head or Tail

Boot shot three

First player has to create own favorite name either relates to flower or food. The created name mustn’t revealed to other players but can be told to members, not involved in game.

In the first round, the selected player has to bend downwards as both the hands touches ground. By saying their favorite names (food or flower), other players have to leap for crossing the player who bend downwards. The player must not take the hands from ground till the completion.

For the second round, the player can bend as he/she touches the feet. Other players have to leap for crossing the player who bend downwards by saying their favorite names.

The height of player can be increased (who bend downward) for every round. The player can be ‘ruled out’ if he/she crosses the person (who bend downward) saying the name that is exactly matches to the secret name.

‘Ruled out’ player creates secret name & bends downwards to be crossed by others.

The game starts now!

Sharing is Caring

Leave a Reply