சொல்ல மறந்த கதை – தாயம் / Solla Marandha Kadhai – Dhayam

chekku oil

சொல்ல மறந்த கதை

பண்டைய தமிழர்களின் கலாச்சாரம், பண்பாடு மற்றும் வாழ்வியலை நாம் நமது இளைய தலைமுறைக்கு சொல்ல தவறிவிட்டோம். சொல்ல மறந்த கதையின் வாயிலாக வெறும் பொழுதுபோக்கிற்காக மட்டுமில்லாமல் அறிவுக்கூர்மையை மேம்படுத்தக்கூடிய பண்டைய தமிழர்களின் விளையாட்டுகளை காண்போம்.

தாயம் உருட்டுதல்

தாயம் உருட்டுதல் பழங்கால விளையாட்டுகளில் குறிப்பிடத்தக்க விளையாட்டாகும். இவ்விளையாட்டை  தனித்தனியாகவும், இரு குழுக்களாகவும் சேர்ந்து மொத்தம் நான்கு பேர் வரை விளையாடலாம்.

எப்படி விளையாடுவது?

ஓர் அடி அளவுள்ள சதுரத்தை 3 க்கு 6 என சம அளவிலுள்ள கட்டங்களாக வரைந்து கொள்ளவும். இக்கட்டத்தை ஒவ்வொருவரும் வெவ்வேறுவிதமாக வரைந்து விளையாடுவார்கள்.

விளையாடும் ஒவ்வொருவரும் தலா 4 காய்களை (கற்கள் அல்லது புளியன்கொட்டைகள்)வைத்துக்கொள்ளவும். நான்கு முக சதுரங்கள் கொண்ட இரண்டு தாயக்கட்டைகளை உருட்டும்பொழுது யாருக்கு முதலில் தாயம் (ஒன்று) விழுகிறதோ அவர் தன் கையிலுள்ள காயை நடுகட்டத்தில் வைத்து ஆட்டத்தை ஆரம்பிக்கலாம். தாயக் கட்டைகள் வெண்கலத்தில் செய்யப்பட்டிருக்கும்.

விழும் தாயத்திற்கேற்ப காய்களை கட்டத்துக்குள் நகர்த்தவும். விழும் தாயத்தில் ஒன்று (தாயம்), ஐந்து, ஆறு, பனிரெண்டு வந்தால் மறுபடியும் எடுத்து உருட்டலாம். தாயம் மற்றும் ஐந்து வந்தால் மட்டும் காய்களை இறக்கலாம். மற்ற ஆட்டக்காரர்கள் காய்கள் வழியில் வந்தால் அவற்றை வெட்டி ஆட்டத்திலிருந்து வெளியேற்றலாம். குறுக்கு கொடு போட்ட கட்டங்களில் காய்களை வெட்ட முடியாது.

மொத்த கட்டங்களையும் ஒரு சுற்று சுற்றிவிட்டு, கடைசி கட்டத்திற்கு வரும் காயை ‘பழம்’ என்பர்.

இப்படியாக யாருடைய காய்கள் முதலில் பழமாகிறதோ, அவரே வெற்றி பெறுவார்.

 

Solla marandha Kadhai

We have forgotten to tell about our forefathers’ customs, traditions & lifestyle to modern generation. Let’s see about the traditional games in the series which are played by our ancestors not only for entertainment but also for refreshment & memory improvement.

Game of dice:

Playing with dice is considered to be one of the traditional games in India. This game can be played maximum up to 4 members either individually or as two teams.

Instructions:

Draw one square foot & divide it into small squares in the range of 3×6. The square foot designs can be differed according to players.

Every player should have ‘four’ coins. A pair of dice with four sides (1, 2, 3, 4, 5, 6, and 12) is used. One can start playing the game by rolling out one face/dot. Dice is made of brass.

One can move the coins as per the dice rolled out. You can roll out again if dice comes with 1, 5, 6 and 12. You can introduce new coins on to the game, if comes 1 & 5.

A player can cut other players coin if it comes on the way. This makes the player to rule out of the game. You can’t cut coins if it in safe zone (square with cross lines).

Those have moved their all six coins to center of board at first is credited to be winner.

Happy gaming!

 

 

Sharing is Caring

Leave a Reply