“நித்தமும் பாடுபட்டு உழைக்கும்
யாவரும் ஓரினம் தான்
சத்திய வார்த்தை இதை
நமக்கு சொல்லுது மே தினம் தான் ” – கவியுலக மார்க்கண்டேயன் வாலி என்று சும்மாவா சொன்னார்கள்.
நமது இலக்கு எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். ஆனால் நாம் அதை அடைய நமக்கு உதவியாய் இருப்பது உழைப்பு. கல் சிற்பமாவதும், விதைகள் மரமாவதும், தானியங்கள் உணவாவதும், கணினி மொழிகள் மென்பொருளாவதும் என்று எதை செய்து முடிக்கவும் நமக்கு உழைப்பு முக்கியமாகிறது. பரந்து விரிந்த நம் நாடு இவ்வளவு பெரிய வளர்ச்சியை அடைந்ததும் இந்த உழைப்பால் தான். தான் ஒரு உழைப்பாளி என்பதை யாரும் பெருமையாக கூறிக்கொள்ள விரும்புவோம். எந்த ஒரு உழைப்பாளியும் ஆரோக்கியத்தோடு இருந்தால் மட்டுமே நாம் விரும்பும் அளவிற்கு உழைக்க முடியும். நம் ஆரோக்கியத்தில் ஒரு சிறிய பங்குதான் நமது செக்கோ. ஆரோக்கியத்தை மட்டுமே இலக்காக கொண்டு உழைத்ததன் விளைவே நம் பாரம்பரிய எண்ணெய் செக்கோ. இந்த உழைப்பாளர் தினத்தில் மேலும் நன்றாக உழைத்திட செக்கோவினை உபயோகித்து பாருங்கள். உழைப்பே உயர்வு தரும். இனிய உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள்.
.