ஓளவையார் “சனி நீராடு” என்று ஏன் கூறி இருப்பார்?

 

Oil-Bath

 

காலையில் எழுந்து பல் துலக்குவதில் இருந்து இரவு All-Out போட்டுவிட்டு தூங்கும் வரை என்று நாம் பல பொருள்களை உபயோகிக்கிறோம். முகப்பருவிற்கு Cream , வெயில் தாகம் தணிக்க Cooldrinks, உடல் சூட்டை தணிக்க shampoo குளியல் என்று எல்லாவற்றிற்கும் ஏதோ ஒரு பொருள் சந்தைகளில் கிடைக்கிறது. நாமும் அதை உபயோகித்து பழகி விட்டோம். ஆனால் என்றாவது ஒரு நாள், நாம் உபயோகிக்கும் பொருட்களை பற்றி யோசித்து இருக்கிறோமா? நிச்சயம், வாங்கும் போது அதன் தரம் பற்றி ஆராய்ந்து விட்டுதான் வாங்குகிறோம். இங்கு தரம் என்று நாம் நினைப்பது அந்த பொருளின் விளம்பரம், அந்த விளம்பரத்திற்கு நடிக்கும் நடிகர்கள், அந்த பொருள் விற்கப்படும் நிறுவனங்கள். தரம் = பணம் என்று பழக்கப்பட்டு விட்டோம். ஒரு துணி எடுக்கும் பொது அதை தொட்டு பார்த்து, தடவி பார்த்து, நன்றாக விரித்து பார்த்து ஒன்றுக்கு மேற்பட்ட கடைகளில் ஏறி இறங்கி கேட்க நேரம் இருக்கும் நமக்கு, நம் நலம் சம்பந்தப்பட்ட பொருட்களில் ஆராய நேரம் இல்லை. உண்மையாக நேரம் இல்லை என்பதை விட இவ்வளவு பணம் செலவழித்து தயாரிக்கப்படும் பொருள் நிச்சயம், தரமானது என்று நாம் நம்பும் அளவிற்கு மாறிவிட்டோம்.

“Shampoo குளியலை விட சீயக்காய் எண்ணெய் குளியல் உடல் சூட்டை தணிக்க வல்லது” என்பது நம்மில் பலருக்கு தெரியும், இருந்தாலும் எண்ணெய் வைத்து குளித்தால் முகத்தில் எண்ணெய் வழியும், முகத்தில் எண்ணெய் வழிவது ஒரு வகையான அநாகரிகம் என்று நம்மை நினைக்க வைத்துவிட்டது இந்த மாற்றம். எண்ணெய் நம் சருமம், கூந்தல் இரண்டிற்குமே கவசம் போன்றது. கிராமங்களில் பிறந்த குழந்தைக்கு காலையில் எழுந்ததும் அந்த தாய் செய்யும் முதல் வேலை, குழந்தையின் தலையில் எண்ணெய் வைப்பது. முன்பெல்லாம் வாரம் ஒரு முறை என்று இருந்த இந்த எண்ணெய் குளியல் பழக்கம் (இதைத்தான் சனி நீராடு என்கின்றனர்) பிறகு தீபாவளி பொங்கல் என மாறி இப்பொழுது இல்லாமலே போய்விட்டது. (தீபாவளி, பொங்கல் கூட இப்பொழுது இல்லாமல் போய்விட்டது). சரியான முறையில் என்னை தேய்த்து , சரியாக குளித்தால் முகத்தில் எண்ணெய் வழிதல் இருக்காது.

சுத்தமான , பாரம்பரியமிக்க தூய நல்லெண்ணெயை இன்றே வாங்குங்கள் . மாற்றத்தின் முதல் படியாக நீங்கள் இருங்கள் ( Buy pure  Sesame oil. Be the Change Yourself First to Change the World)

அப்படி என்னதான் பலன் இருந்துவிடக்கூடும் இந்த எண்ணெய் -இல் என்று நினைக்கிறீர்களா?

பல நன்மைகள் இருக்கிறது. அதில் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதில் நீங்கள் ஏதேனும் ஒன்று தவறு என நினைத்தால் நிச்சயம் உங்கள் வீட்டில் இருக்கும் பெரியவர்களையோ அல்லது கூகுளிலோ தேடி பாருங்கள் விடை கிடைக்கும். “சனி நீராடு” என்று ஓளவையார் ஏன் கூறி இருப்பார்? என்று கூட யோசித்து பாருங்கள்.

உடலுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பது உடலுக்கு உறுதியையும், தோலுக்கு பளபளப்பையும் அளிக்கிறது
உடல் சூட்டைத் தணிக்கும்
உடல் புத்துணர்ச்சி பெறும்
உடலில் உள்ள நரம்புகள் செயல்பாடு அதிகரிக்கும்
சளி தலைவலி தொல்லையில் இருந்து விடுபடலாம்
ஆரோக்கியமான தூக்கத்திற்கு வழி வகுக்கும்

எண்ணெய் தேய்த்துக் குளிப்பதா? அதற்கெல்லாம் இப்போது நேரம் இருக்கிறதா? என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் நம் நாடு வெப்பமான நாடு. எனவே வேனல் கட்டி, கொப்புளங்கள், வேர்க்குரு போன்றவை வெயில் காலத்தில் ஏற்படுவது இயல்பு. வாரத்திற்கு இருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிப்பதன் மூலம் இப்படிப்பட்ட பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்க முடியும். உடலில் எண்ணெயை நன்றாக அழுத்தித் தேய்ப்பதன் மூலம் அது தோலில் உள்ள மேல் அடுக்குகளுக்குள் சென்று பல நல்ல விளைவுகளை ஏற்படுத்துகிறது. வியர்வையின் காரணமாக தோலில் ஏற்பட்டுள்ள அழுக்குகளையும், நுட்பமான அடைப்புகளையும் எண்ணெய்க் குளியல் நீக்கிவிடுகிறது. தோலின் கழிவான வியர்வை தடையில்லாமல் வெளியேறுகிறது. இதனால் உடலில் பல உள்ளுறுப்புகள் சிறப்பாகச் செயல்பட வழி ஏற்படுகிறது.

நோயற்ற வாழ்விற்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் எண்ணெய் குளியல் அவசியம். மறக்காமல் எண்ணெய் தேய்த்து குளிக்கையில் சூடான தண்ணீரில் குளியுங்கள். ஆனால் இவ்வளவு நேரம் நாம் கூறும் எண்ணெய் பாமாயிலோ , சூரிய காந்தி எண்ணெயோ அல்ல. இயற்கையான முறையில் செக்கில் ஆட்டி எடுக்கப்படும் எண்ணெய். பொதுவாக குளியலுக்கு நல்லெண்ணெய் உபயோகிக்கலாம். விளக்கெண்ணெய், வலி போக்குவதற்காக தடவலாம்.

செக்கினால் ஆட்டி எடுக்கப்படும் எண்ணெயினை தேடி சென்று வாங்குங்கள். இனியாவது தரம் = பணம் என்றில்லாமல் உண்மையினை தரத்தை நோக்கி நகர்ந்திடுங்கள். ஒருவேளை உங்களுக்கு செக்கு எண்ணெய் வாங்குவதில் சிக்கல்கள் இருந்தால் www.agaramfoods.com அல்லது Buy Chekku oil Online இந்த இணைப்பிலோ சென்று வாங்கலாம். இந்த எண்ணெய் உங்கள் வீடு தேடியும் மற்றும் சென்னையின் பல கடைகளிலும் கிடைக்கும். மேலும் பல விவரங்களுக்கு Locations அல்லது +91 91766 79154 இந்த நம்பரை தொடர்பு கொள்ளவும்

Sharing is Caring

Leave a Reply